திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சோனு சூட் சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான கோயிலில் பிரபல நடிகர் சோனு சூட் சாமி தரிசனம் செய்தார்.
 
ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் நடுவராக செயல்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுவுக்கு 'உலக மனிதாபிமானி' விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பதி மலைக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற சோனு சூட் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து, அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சி வேண்டி பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்து தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

Night
Day