ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக மலையப்ப சுவாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு இன்று காலை திருமலையில் நடைபெற்றது. சூரிய பிரபை வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலிலிருந்து எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நைவேத்தியங்களுக்கு பின் கோவில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையப்ப சுவாமியை வழிபட்டனர். பின்னர் இரண்டாம் வாகன புறப்பாடாக சின்னசேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...