கோவை: ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்சவ வைபவம் விமரிசையாக தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்சவ வைபம் விமரிசையாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ ராமர் சீதா, லட்சுமணன் ஆஞ்சநேயர் சகிதம் திருவீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமர், சீதாதேவி, ஆஞ்சநேயர் உடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். வேத விற்பன்னர்கள் மந்திரங்களுடன் மங்கள வாத்தியங்கள் இசைக்க தெப்பத் தேர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு ஸ்ரீராமர் அருள் பாலித்தார்.

varient
Night
Day