இந்து அல்லாதோர் பழனி கோயில் கொடிமரம் தாண்டிச் செல்ல தடை : உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்துக்கள் அல்லாதோர் பழனி முருகன் கோயிலுக்குள் நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

பழனி கோயிலுக்குள், 'இந்து அல்லாதவர்கள் நுழைய தடை' என்ற பதாகையை மீண்டும் வைக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதாகையை மீண்டும் வைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்து, வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது, இந்துக்கள் அல்லாதோரை கோயில் கொடிமரம் தாண்டி அனுமதிக்கக் கூடாது என்றும், மாற்று மதத்தினர் கோயில் பதிவேட்டில் தண்டாயுதபாணி சுவாமி மீது நம்பிக்கை கொண்டு வழிபட விரும்புகிறேன் என்ற உறுதிமொழி அளித்த பின்பு அனுமதிக்கலாம் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.

Night
Day