எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், நெய்விளக்கு சூடம் ஏற்றி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் வழிப்பாடு செய்தனர். ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
தஞ்சையில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கீழவாசல் வட பத்திர காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு வடபத்ர காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.