அபூர்வ சக்தி படைத்தவன் நான்... இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்கும் சித்தர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரியில் ஒளி வடிவமாக உடல் மாறி வருவதாகவும், உடலில் இருந்து நெருப்பு வருவதாகவும் சித்தர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.... விஞ்ஞான ரீதியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கூறும் சித்தரின் கூற்றுகள் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நாம் காணும் வீடியோ காட்சிகள், THERMAL CAMERA, RR CAMERA, GHOST CATCHING CAMERA மூலம் படம்பிடிக்கப்பட்ட சித்தர் ஒருவரின் உடல் தான்... கேமரா காட்சிகள் அனைத்தும் சித்தரின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாக காட்டுவதுடன், மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன...

சித்தர்களுக்கு பல்வேறு அமானுஷ்ய சக்திகள் உண்டு என்பது அனைவரும் அறிந்தது தான்... அருணாகிரிநாதர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மனித உடலில் இருந்து கிளியாக மாறி கூடு வீட்டு கூடு பாய்ந்ததாக வரலாறு கூறுகிறது...

ஆகாயத்தில் பறந்து வந்து முருகன் என்னை அழைத்துக்கொள்வான் எனக்கூறிய திருமுருக கிருபானந்தவாரியார், விமானத்தில் வரும் போது வானிலேயே மரணத்தை தழுவினார்...

பாம்பாட்டி சித்தர் பற்றியும், திருமூலர் சித்தர் குறித்தும், போகர் சித்தர் பற்றியும் நாம் அறியாதது ஏராளம்... பழனி தண்டாயுதபாணி கோவில் முருகனின் அபிஷேக சந்தனமும், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் பன்னீர் இலை விபூதியும், தீராத நோயையும் தீர்த்து வைப்பதாக ஆன்மீக அன்பர்கள் நம்புகின்றனர்...

பிரசித்தி பெற்ற சதுரகிரியில் தற்போதும் சித்தர்கள் சிலர் நூறு வயதை தாண்டி வாழ்ந்து வருவதாகவும், பவுர்ணமி, அமாவாசை நாள்களில் சித்தர்கள் சதுரகிரியில் தவம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது...

இந்திரா சவுந்திரராஜன், எழுதிய சிவமயம் நாவல் சித்தர்கள் உலகத்துக்கும், சிவனின் உலகத்துக்கும் நம்மை அழைத்து சென்றது...

அந்த வகையில் கிருஷ்ணகிரி சித்தரும் தமக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறியுள்ளார்... கிருஷ்ணகிரி நகரின் செந்தில் நகரில் வசித்து வருபவர் முருகு அருள் சிவம்....

கடந்த 30 ஆண்டுகளாக சித்தர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததன் பலனாக தமக்கு இந்த அபூர்வ சக்தி கிடைத்ததாக கூறுகிறார்...

ஒளி வடிவ மனிதனாக தான் மாறி வருவதாக கூறிய சித்தர் முருகு அருள்சிவம், உலகிலேயே தமக்கு மட்டுமே இந்த அபூர்வ சக்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்...

தன் உடலில் இருந்து நெருப்பு வருவதகவும், தான் இரும்பு பொருட்களை தொட்டால் அதற்கு காந்த சக்தி கிடைக்கும் எனவும் தன்னால் காற்று அணுக்களை கட்டுப்படுத்த முடியும் என கூறுகிறார்...

அரசு தன்னிடம் ஆய்வு நடத்த முன்வந்தால் தான் கூறுபவற்றை நிரூபித்து காட்ட முடியும் என கூறுகிறார் சித்தர் முருகு அருள்சிவம்...

தனது கூற்றுக்கு ஆதாரமாக, உடல் வெப்பத்தை  படம் பிடிக்கும் THERMAL CAMERA,  RR CAMERA,  GHOST CATCHING CAMERA உள்ளிட்ட கேமாரக்களால் தனது உடலை படம் பிடித்த காட்சிகளை சித்தர் முருகு அருள்சிவம் காண்பிக்கிறார்...

அதிசய சக்தி படைத்த தன்னை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் என 2022ஆம் ஆண்டு முதல் கோரி வருவதாக கூறியுள்ள சித்தர் முருகு அருள்சிவம், விரைந்து தன் உடலில் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்...

தமக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சித்தர் முருகு அருள் சிவம் கோரிக்கை விடுத்துள்ளார்...

Night
Day