விவசாயியை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி..!

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம்  உத்திரமேரூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி ஒருவர் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் கேட்க சென்றபோது திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவன்பாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் சில விவசாயிகளின் நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் மூட்டைக்கு 55 ரூபாய் செலுத்தி கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் வராமல் உள்ளதால் பல விவசாயிகள் கஷ்டப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விவசாயிகள் நெல்லுக்கு பணம் வழங்க கோரியபோது, அதிகாரிகள் கடந்த 13ம் தேதிக்குள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என கடிதம் எழுதி கொடுத்துள்ளனர். ஆனால் தங்களுக்‍கு இன்னும் பணம் வரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். மருத்துவன்பாடி நெல் கொள்முதல் நிலையத்தை அதே ஊரைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. விவசாயி ஒருவர் நெல் போட்டதற்கு பணம் கேட்க சென்றபோது தகாத வார்த்தைகளால் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day