பெண் எஸ்.ஐ-யை தாக்கி நகைகள் கொள்ளை... விளம்பர ஆட்சியின் அவலம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர் வீட்டிலேயே ஒரு கும்பல் கைவரிசை காட்டி திருடி சென்றுள்ளது. புதுக்கோட்டை பெண் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் அவரது கணவரை இரும்பு கம்பியால் தாக்கிய மர்மகும்பல் நகையை கொள்ளையடித்தது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

புதுக்கோட்டை அருகே மணப்பட்டி சாலையில் உள்ள வீட்டில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி காவல் ஆய்வாளார் சுமையா பானு வசித்து வருகிறார். இவரது கணவர் நாகசுந்தரம் திருமயம் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் ஆந்திரா சென்றுவிட்டு கடந்த 28ஆம் தேதி வீடுதிரும்பியுள்ளனர். 

இரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டின் பின்பக்கம் கதவை உடைத்துவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்துள்ளனர். படுக்கையறைக்குள் நுழைந்த கும்பல், தம்பதியரை சரமாரியாக இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கின்றனர். பின்னர் சத்தம் போடக்கூடாது என்று மிரட்டி இருவரையும் தரையில் அமர வைத்திருக்கின்றனர். நகை, பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் அணிந்திருந்த தங்கசெயின், மோதிரம் என 10 சவரன் தங்க நகைகளை பறித்துவிட்டு, வீடு முழுவழுதும் பணம், நகை தேடியும் கிடைக்காததால் வீட்டின் பின்புறம் வழியாக தப்பிசென்றுள்ளனர்.

மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த சுமையான பானுவின் கணவர் நாகசுந்தரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்தசம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு சுமையா பானு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையர்களை தேடியுள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பிநீட்டிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தார் தலைமையிலான அனைத்து கிரைம் டீம்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உதவி காவல் ஆய்வாளரை தாக்கி கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தினம் தினம் குற்றங்கள் அதிகரித்து கொண்டு இருக்கும் சூழலில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசாருக்கே இன்று பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுக்கின்றனர். காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கொலை செய்வதும் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. சட்டம் - ஒழுங்கை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் அனைத்து துறைகளிலும் நம்பர் 1 என மெச்சி கொள்வதோடு நின்றுவிடுகிறாரே தவிர செயலில் எதுவும் இல்லை என்பதே மக்களின் புலம்பலாக உள்ளது. 

வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய உதவி காவல் ஆய்வாளரையே இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு கொள்ளை சம்பம் அரங்கியுள்ளது என்றால், சாமானிய மக்களின் நிலை தான் என்ன? விளம்பர திமுக ஆட்சியில் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் இதற்கு விடிவு தான் என்ன என்பதே மக்களின் ஆதங்கமாக உள்ளது. 

Night
Day