கலர் கலரா கள்ளநோட்டு...! விசிக பிரமுகரின் வில்லத்தனம்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

சமீபகாலமாகவே தமிழகத்தில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கடலூர் விசிக மேற்கு மாவட்ட பொருளாளர் கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்திலும் கள்ள நோட்டு கும்பலின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக ஒயின்ஷாப், மளிகை கடை, காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி கள்ள நோட்டு புழக்கம் இருப்பதை மோப்பம் பிடித்த போலீசார், கள்ள நோட்டு கும்பலை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். இந்தநிலையில் தான் கடலூரில் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தில் வயல்வெளியில் தகர கொட்டகை அமைத்து கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுமட்டுமின்றி அந்த இடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வரும் செல்வம் என்பவருக்கு சொந்தமானது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தை சுற்று வளைத்து போது, போலீசாரை கண்டதும் விசிக மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் தலைமையிலான கும்பல் தெறித்து ஓடியது. பின் கொட்டகைக்கு உள்ளே சென்று போலீசார் சோதனையிட்ட போது அங்கு, கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம், வாக்கி டாக்கிகள், கள்ள நோட்டை அச்சடிக்க தேவையான பேப்பர் போன்றவை இருந்தது. அதுமட்டுமின்றி 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு லேப்டாப், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், பணம் எண்ணும் இயந்திரம் போன்றவையும் இருந்தது. 

இதையடுத்து அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வாசலில் நின்று கொண்டிருந்த விசிக கொடி பொருத்தப்பட்டிருந்த காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் செல்வம் உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

சென்னை நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் தனியார் வங்கியுடன் கூடிய ஏடிஎம் டெபாசிட் மையத்தில் 14 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவத்தில் ஆலந்துரையை சேர்ந்த மெகதாப் அலி மற்றும் புதுப்பேட்டையை சேர்ந்த நஜிமுத்தீன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதேபோல ஈரோடு மாவட்டம் சிவகிரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் டெபாசிட் மையத்தில் 8 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதில் மூங்கி வியாபாரிக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்து தலைமறைவானார் அந்த மூங்கில் வியாபாரி. 

அதுமட்டுமின்றி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்றதாக நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆண்டனி செல்வன், திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ், சங்கரன்கோவில் அய்யாதுரை, மதுரை இசக்கிமுத்து ஆகியோர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இப்படி தமிழகத்தில் கள்ள நோட்டு கும்பலின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஆளும் விளம்பர திமுக ஆட்சியில் அங்கம் வசிக்கும் விசிக கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளரே எந்தவொரு அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக தகர கொட்டகை அமைத்து கள்ள நோட்டுகளை அச்சடித்து அதனை புழக்கத்தில் விட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புழக்கத்தில் வரும் கள்ள நோட்டுகள் இந்திய பொருளாதாரத்திற்கே மிகப்பெரிய சிக்கலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறக்கூடிய அபாயம் இருக்க, அது சாமானிய மக்கள் மீதே மேலும் சுவையை ஏற்படுத்தும் என்பது தான் நிதர்சனமான உண்மை. 

அதனாலேயே புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கக்கூடிய தேச விரோத செயல்களில், ஆளும் விளம்பர திமுக ஆட்சியின் அங்கத்தினர் செய்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day