உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு..!!

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனை 18 வயதான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் இந்திய வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய குகேஷுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க நூற்றுக்கணக்கானோர் விமான நிலையத்தில் திரண்டு குகேஷை வாழ்த்து பதாகைகளுடன் வரவேற்றனர். 

Night
Day