எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோடநாடு எஸ்டேட்டில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் மணிமண்டபம் கட்ட விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு அனுமதி தர மறுப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியிருந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களால் நான் மக்களுக்கானவே நான் என்ற தாரக மந்திரத்தை தனது மூச்சாகவே கொண்டிருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியே தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு மக்கள் அவரது ஆட்சி நிர்வாகத்தை சிலிர்த்து சிலாகித்து கொண்டாடி வருவது தான் நிதர்சனமாக உண்மை.
விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதி வண்டி என மாணவர்களுக்கான திட்டங்களாக இருந்தாலும் சரி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் சுய உதவிக்குழு திட்டம் என பெண்களுக்காக பல முன்னோடி திட்டங்களாக இருந்தாலும் சரி மக்களின் முன்னேற்றம் ஒன்றையே அடிப்படையாக கொண்டு செயல்பட்ட ஒரே தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா மட்டுமே. அதுமட்டுமா மக்களின் பசிப்பிணியை போக்க புரட்சித்தலைவி அம்மாவால் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம் திட்டத்தால் மக்கள் அடைந்த பயனை சொல்லி புரிய வைப்பதற்கு இல்லை.
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் குற்றவாளிகள் தமிழ்நாட்டில் இருந்து தப்பியோடி அண்டை மாநிலங்களில் பதுங்கிக் கொள்ளும் அளவுக்கு பெண்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இரும்பு கவசமாக விளங்கியது புரட்சித்தலைவி அம்மா-வின் ஆட்சி நிர்வாகம்.. இப்படி தமிழக மக்கள் நலனை பேணி காப்பதில் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த மாபெரும் ஆளுமைக்கு கோடநாடு எஸ்டேட்டில் மணி மண்டபம் கட்ட விடாமல் விளம்பர திமுக அரசு தடுப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியிருந்தார். மணி மண்டபம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரிய போதும் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய புரட்சித்தாய் சின்னம்மா அனைத்து தடைகளையும் மீறி நிச்சயம் அம்மாவுக்கான மணி மண்டபத்தை எழுப்புவோம் எனவும் சூளுரைத்தார்.
இந்தநிலையில் கோடநாடு எஸ்டேட்டில் புரட்சித்தலைவி அம்மாவின் மணிமண்டபம் அமைப்பதற்கு விளம்பர திமுக அரசு அனுமதி அளிக்காததற்கு அரசியல் விமர்சகர் வி.எஸ். ராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் இடத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் மணிமண்டபம் அமைக்க, யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும் விளம்பர திமுக அரசு வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாகவும் சாடினார்.
இதேபோல, புரட்சித்தலைவி அம்மாவின் மணிமண்டபம் கோடநாடு எஸ்டேட்டில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் மேலும் பல இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என ஆணித்தரமான வலியுறுத்தினார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற புரட்சித் தலைவி அம்மாவின் திட்டங்களை தொடர்வதாக திமுக கூறி வருவது உண்மையானால் அவரின் புகழை கொண்டு சேர்க்கும் கோடநாடு மணிமண்டபத்திற்கு ஏன் அனுமதி வழங்க மறுக்கிறது என மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கோடநாடு பகுதியில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு மணிமண்டபம் கட்ட திமுக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய அதேநேரம் தாயுள்ளத்தோடு அன்பால் ஆட்சி புரிந்த புரட்சித்தலைவி அம்மா இன்றளவும் மக்களின் மனங்களில் நீக்கமற ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு மணிமண்டபம் அமைக்க தடை போடுவதற்கு மக்களின் கண்ணீரில் விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவுக்கு எந்தவித அறுகதையும் இல்லை என்ற கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.
விஞ்ஞான ஊழல்வாதி என்ற போற்றுதலுக்குரிய கருணாநிதிக்கு மக்களின் வரி பணத்தில் ஆங்காங்கே சிலை வைத்துக் கொண்டு வரும் திமுக அரசுக்கு, கோடநாடு எஸ்டேட்டில் புரட்சித் தலைவி அம்மாவுக்கு மணிமண்டபம் அமைக்க தடை விதிப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.