எழுத்தின் அளவு: அ+ அ- அ
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடியான வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. இந்த தாக்குதல் பகல்காம் தாக்குதலில் பலியானவர்கள் சித்திய ரத்தத்துக்கு பதிலடி என்றே கூறப்படும் நிலையில் இந்த தாக்குதலுக்கு சிந்தூர் என பெயரிட்டதன் காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்..!
ஜம்மு காஷ்மீரின் பஹால்காமில் உள்ள பைசரன் மலைக்கு டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 26 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டது. புதுத்தாலியுடன் ஹனிமூனுக்கு சென்றவர்கள், குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்களின் ஆண்களை மட்டுமே குறி வைத்து அவர்களின் மத அடையாளங்களை கேட்டு கேட்டு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலும் திருமணமான பெண்கள் கண் முன்னே கணவன்மார்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு இறையாக்கப்பட்டது கொடுமையின் உச்சமாகவே இருந்தது.
இதில் திருமணமான ஏழே நாளில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான கடற்படை அதிகாரியின் உயிரற்ற சடலத்தின் அருகில் அவரது மனைவி ஹிமான்ஷி எந்தவொரு சலனமும் இன்றி அமைதியாக அமர்ந்திருந்த புகைப்படம் காண்போரின் இதயத்தை கணக்கச் செய்தது. அதுமட்டுமின்றி திருமணமாகி மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில், ஷுபம் மற்றும் அவரது மனைவியான ஐஷன்யா (Aishanya Dwivedi), தங்கள் குடும்பத்துடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் தீவிரவாத தாக்குதலால் தற்போது கணவனை இழந்து நிற்கிறார் ஐஷன்யா. இப்படி பகல்மாக் தீவிரவாத தாக்குதலால் 25 பெண்கள் தங்கள் கனவணை இழந்து இன்று விதவைகளாக உள்ளனர்.
இதில் பலர் கணவன் பலியான அதே துப்பாக்கியால் தங்களையும் கொன்று விடுமாறு தீவிரவாதிகளிடம் கெஞ்சிய நிலையில் இங்கு நடந்ததை உங்கள் பிரதமரிடம் கூறவே உங்களை விட்டு வைத்திருப்பதாக தீவிரவாதிகள் ஒரே குரலாக கொக்கரித்தது ஒட்டு மொத்த இந்தியாவையும் உச்சபட்ச கோபத்துக்கு ஆளாக்கியது. அதுமட்டுமின்றி தாக்குதலுக்கு சில நிமிடங்கள் வரை சிரித்து விளையாடியபடி இருந்தவர்கள் தாக்குதலுக்கு பிறகு உயிரிழந்த உறவுகளின் அருகில் அழுது கதறிய காட்சிகளும் உதவிக்காக அலைந்து திரிந்த காட்சிகளும் நெஞ்சை உருக்கும் விதமாகவே இருந்தது.
இப்படி 26 உயிர்களை பலி வாங்கியது மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீதும் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட தாக்குதலாகவே இது பார்க்கப்பட்டது. இந்தநிலையில் தான் பகல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இரவு சுமார் 1.05 மணியளவில் தொடங்கிய தாக்குதல் 30 நிமிடங்கள் வரை நீடித்த நிலையில் 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை வீசி அதிரடியான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. இந்த தாக்குதலுக்கு சிந்தூர் என பெயரிட்டு இந்தியா கர்ஜித்துள்ள நிலையில் அதன் பின்னணியில் இருப்பது விதவைகளாக்கப்பட்ட 25 பெண்களின் நெற்றி திலம் என்றே கூறப்படுகிறது.
திருமணமான பெண்களின் மங்களகரமான குறியீடுகளில் மிக முக்கிய இடம் பெறுவது குங்குமம் தான். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட குங்கும் தீவிரவாதிகளால் சூறையாடப்பட்டிருப்பதாலேயே ஒந்த ஆபரேஷனுக்கு குங்கும் என்பதை குறிக்கும் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளதாம். அதுவும் இந்த பெயரை பிரதமர் மோடியே தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் OPERATION SINDOOR என்பதில் வரும் இரண்டு ஓ-க்களில் ஒன்று குங்கும சிமிழ் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் மங்களகரமான குங்கும சிமிழில் இருந்து குங்குமம் சிறரிக்கிடப்பது போல அமங்களகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியும், தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்து நிற்கும் 25 இந்திய பெண்களில் துயரத்தை காட்டுவதாகவே உள்ளது.
இப்படி 25 இந்திய பெண்களின் குங்குமத்தை தீவிரவாதிகள் அழித்துச்சென்ற நிலையில் அதற்கு தக்க பதிலடியாக அவர்களின் முகாம்கள் புல் பூண்டு கூட முளைக்காத அளவுக்கு தகர்த்தெறியப்பட்டுள்ளது.