9 விக்‍கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பைக்‍கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்‍கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரில் 38வது லீக்‍ ஆட்டம் நேற்று மும்பை- ராஜஸ்தான் அணிகள் இடையே, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்‍குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. பின்னர் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 183 ரன்கள் எடுத்தது. 

Night
Day