20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூயார்க்‍ புறப்பட்ட இந்திய வீரர்கள் யுஸ்வேந்திர சஹால், ஆவேஸ் கான், ஜெய்ஸ்வால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் யுஸ்வேந்திர சஹால், ஆவேஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகிய மூவரும் மும்பை விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் புறப்பட்டனர். உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள இந்திய அணி வீரர்கள் இரண்டு பிரிவுகளாக அமெரிக்கா செல்வார்கள் என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி, கேப்டன் ரோகித் சர்மா,பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலர் ஏற்கனவே அமெரிக்கா சென்றுவிட்டனர். இந்த நிலையில் சஹால், ஆவேஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் ஐபிஎல் பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாடியதால் அதனை முடித்துக் கொண்டு சென்றனர். நாளை அவர்கள் அணி வீரர்கள் உடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

varient
Night
Day