19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்‍காவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 
இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற உள்ளது.

varient
Night
Day