பிரேசில் முன்னாள் கால்பந்து வீரருக்கு 4.5 ஆண்டுகள் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2022 ஆம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் டேனி ஆல்வசுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள நைட் கிளப் ஒன்றில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக டேனி ஆல்வஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த ஓராண்டாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாலியல் பலாத்கார குற்றம் ஊர்ஜிதமானதாக தெரிவித்த ஸ்பெயின் நீதிமன்றம் டேனி ஆல்வசுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Night
Day