பாரீஸ் ஒலிம்பிக் - பதக்கங்கள் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை, ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், 5 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்னும் பல வியத்தகு சாதனைகளை அவர்கள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோன்று ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் ஹாக்கி வீரர்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர் அமன் ஷெராவத்துக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 
 
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், ஐந்து வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இன்னும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

varient
Night
Day