விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடைபெற்ற கபடி போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனியப்பபுரம் பகுதியில் மகளிருக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சின்னமாடன் குடியிருப்பு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி 2ம் பரிசையும், கோவில்பட்டி மின்னல் அணி 3ம் பரிசையும் தட்டி சென்றன. இந்த போட்டியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...