இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ள நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. அதேசமயம், இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடைபெறவுள்ளது. லார்ட்சில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு பதில் துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் கில், இன்று நடைபெறும் போட்டியில் ரிஷப் பண்ட் 4வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும், அன்சுல் காம்போஜ் இப்போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, முதல் நாள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் போட்டி திட்டமிட்டப்படி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

Night
Day