எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள திவ்யா தேஷ்முக், இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக ஃபிடே மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திரச் சாதனையைப் படைத்து இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார் என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக செஸ் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதியான இருவருமே இந்திய வீராங்கனைகள் என்பது நாட்டில் உள்ள நம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக புரட்சிதாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என பாராட்டியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா,
இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.