டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்தியா சாம்பியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப் சுற்று நடைபெற்றது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரட்டையர் பிரிவில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 6க்கு 2, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல் மாற்று ஒற்றையர் பிரிவிலும் 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. முடிவில் இந்திய அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன் நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day