டி-20 தொடரில் சிக்ஸர் மழை பொழிந்த பஞ்சாப், கொல்கத்தா அணிகள் - மொத்தம் 42 சிக்ஸர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான நேற்றை ஐபிஎல் போட்டி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு கொல்கத்தா - பஞ்சாப் என இரு அணி வீரர்களும் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு அசத்தினர். மொத்தமாக இந்த ஒரு போட்டியில் மட்டும்  42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. இதற்கு முன்னதாக நடப்பு ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் - பெங்களூர் மற்றும் ஹைதராபாத் - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களில் அதிகபட்சமாக 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தன. அந்த சாதனையை நேற்றைய ஆட்டம் முறியடித்தது. 

Night
Day