தாய்லாந்து: ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன தாய்லாந்து மாடல் அழகி பிணவறை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். தாய்லாந்தை சேர்ந்த மாடல் அழகி கைகன் கென்னகம் என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி பஹ்ரைன் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒரு உணவத்தில் வேலை கிடைத்த நிலையில், பஹ்ரைனில் ஒருவரை காதலிப்பதாக தனது குடும்பத்தினரிடம் கைகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அவர், தன் குடும்பத்தைத் தொடர்புகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், கைகன் கென்னகனின் பெற்றோர் தாய்லாந்து தூதரகத்தின் உதவியை நாடிய நிலையில், 18ம் தேதி சல்மானியா மருத்துவ வளாகத்தில் பிணவறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

Night
Day