ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் : 2-வது அரையிறுதி - ஆஸி., பாகிஸ்தான் மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 

15வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடர்ந்து 6வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில், தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி வரும் 11ம் தேதி பெனோனியில் நடைபெறும் இறுதிபோட்டியில் இந்தியாவுடன் விளையாடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Night
Day