செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச சதுரங்க விளையாட்டில் முதல்முறையாக இந்தியா தங்கப்பதக்கம் வென்றிருப்பதற்கும் அதிலும் வரலாற்று சாதனையாக  2 தங்கப்பதக்கங்களை  ஒரே நேரத்தில் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி  உள்ளிட்ட இந்திய அணியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

 அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று  இந்தியா சாதனை படைத்திருப்பது நம் அனைவருக்கும் மிகவும் பெருமையளிப்பதாக  தெரிவித்துள்ளார்.

இந்த இமாலய சாதனையை  நிகழ்த்தியுள்ள இந்திய சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சதுரங்க விளையாட்டில் முதல் முறையாக இந்தியா தங்கப்பதக்கம் வென்று இருப்பதும், அதிலும் வரலாற்று சாதனையாக இரண்டு தங்கப்பதக்கங்களை ஒரே நேரத்தில் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட இந்திய அணியை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள்  மென்மேலும் பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day