சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Night
Day