காராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய நடிகர் சூர்யாவின் மகன்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சூர்யாவின் மகன் காரத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய நிகழ்ச்சியை சூர்யாவும் அவரது தந்தை சிவக்குமாரும் நேரில் கண்டு களித்தனர். 

சென்னை அசோக் நகர் 7 ஆவது அவன்யுவில் உள்ள ஜென் இசின்றியு கராத்தே அசோசியேசன் சார்பில் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கப்பட்டதில், நடிகர் சூர்யா மகன் தேவும் பிளாக் பெல்ட் பெற்றார். இதனை நடிகர் சூர்யா, அவரது தந்தை சிவக்குமார், தாய் லட்சுமி சிவக்குமார் கண்டு மகிழ்ந்தனர்.

Night
Day