ஐபிஎல் போட்டி : சென்னையில் இன்றும், வரும் 26-ம் தேதியும் போக்குவரத்து மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக சென்னையில் இன்றும், வரும் 26ம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐஎபிஎல் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், சென்னை - பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதேபோல் வரும் 26ம் தேதி சென்னை - குஜராத் அணிகள் மோதும் போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்றும் வரும் 26ம் தேதியும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜாசாலை, காமராஜர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day