உதவிய நண்பருக்கு கை கொடுத்த எம்.எஸ்.தோனி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வரும்  தோனி தனது நண்பர் நிறுவனத்தின் பேட்டையே பயன்படுத்தி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சொந்த ஊரான ராஞ்சியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பயிற்சியின்போது, தனக்கு முறையாக ஸ்பான்சார் கிடைக்க உதவிய நண்பரின் நிறுவனத்திற்கு கைகொடுக்கும் விதமாக, அவருடைய நிறுவன பேட்டையே பயன்படுத்தி வருகிறார். அந்த பேட்டுடன் பயிற்சி பெறும் தோனியின் புகைப்படம் வைரலாகும் நிலையில், நண்பர் நிறுவனத்தை பிரபலப்படுத்த சிறிய பேட்களில் ஆட்டோகிராஃப் போடும் வீடியோவும் வைரலாகி வருகிறது. 

Night
Day