கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மருத்துவர்கள் எச்சரிக்கை 09-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பெண்களில் அதிகமானோர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது... கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் பாதுகாப்பாக இருப்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... 

உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகவே கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது...

அந்த வகையில் இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 85 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது...

இந்த பட்டியலில் தமிழகம் அதிக உயிரிழப்புடன் 2-வது இடத்தில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன... பபோலோமியா எனும் வைரஸ் தாக்கத்தால் பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதாக கூறும் மருத்துவர்கள், புற்றுநோய் குறித்து பரிசோதிக்கவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் இந்திய பெண்கள் முன்வருவது இல்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்... 

பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்துவது மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளாத காரணத்தினால் பபோலோமியா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு கர்ப்பப்பையில் புற்று செல்களை உண்டாக்கி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்...

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வருவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்...

தங்களது குழந்தைக்கு எப்படி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் என்று போதிய விழிப்புணர்வு இல்லாமல் பெற்றோர்கள் இருப்பதாக கூறும் சிம்ஸ் மருத்துவமனை மூத்த புற்றுநோயியல் மருத்துவர் சுமனா பிரேம்குமார், இனியாவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்...

புற்றுநோய் என்றாலே தீண்ட தகாதவையாகவும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே மக்கள் பார்ப்பதாக தெரிவித்த மருத்துவர் சுமனா பிரேம்குமார், புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றும், அதற்கான தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்...

ஆரம்ப நிலையிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டால் அவற்றிலிருந்து நிச்சயம் குணமடையும் முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீத பெண்கள் உயிரிழக்கும் நிலையில், நடப்பு மத்திய பட்ஜெட்டில் ஒன்பது முதல் 14 வயதுடைய வளரிலம்பருவ பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...

அதே சமயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்...

Night
Day