கிடப்பில் "இறைவனின்" சமையலறை... வேதனையில் மாற்றுத் திறனாளிகள்... 09-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகமே வியந்து பார்த்த மாற்றுத்திறனாளிகளுக்கான இறைவனின் சமையலறை திட்டம் முடங்கிப் போனதால் மாற்றுத்திறனாளிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில், வாரா வாரம் வியாழக்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்வு முகாம் நடைபெறுவது வழக்கம்.

அதுமட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் இருந்து, தினந்தோறும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய மாவட்டம் என்பதால், 80 முதல் 110 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள மாற்றுத்திறனாளிகள், முகாமிற்கு வருகை தந்து மனு அளித்து வருகின்றனர்.

இதனை அறிந்த திருவண்ணாமலையில் பணியாற்றி வந்த, முன்னாள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாற்றுதிறானாளிகளுக்கு தேவையான உணவை, இறைவனின் சமையலறை என்ற பெயரில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனியாக கட்டிடம் கட்டி இலவசமாக சமைத்து விநியோகித்து வந்தார்.

இந்த இறைவனின் சமையலறை திட்டம் தமிழ்நாடு முழுவதும் கவனம் பெற்றதுடன், அனைவரது பாராட்டையும் திருவண்ணாமலை மாவட்டம் பெற்றது. அப்படிப்பட்ட இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதனால் பல கிலோ மீட்டர் பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தங்களது குறைகளை கூறும் மாற்றுத்திறனாளிகள், உணவு கிடைக்காமல் நடந்து சென்று உணவை வாங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்கும் வகையில், இறைவனின் சமையலறை திட்டத்தை மீண்டும் துவக்கி, மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோவில்களில் உணவை இலவசமாக வழங்குவது போல தமிழக அரசு பல்வேறு வகைகளில் துன்பப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருதி, இறைவனின் சமையலறை திட்டத்தை மீண்டும் இயக்கி மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்க வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day