17வயது சிறுவன் ஜேசிபி-யை இயக்கி வாகனங்கள் மீது மோதியதால் அதிர்ச்சி, உயிர் தப்பிய காவலாளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே நள்ளிரவில் 17 வயது சிறுவன்,  Jcb-யை எடுத்துச் சென்று மோதியதில் காவலாளி ஒருவர் நூலிலையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் செல்லூர் 50 அடி சாலை முதல் கண்மாய்கரை சாலை வரை, 17வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் JCB வாகனத்தை இயக்கி சாலையோரம் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளான். இதில் கார், ஷேர் ஆட்டோக்கள், பைக்குகள் என 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் கட்டிடங்கள், மரம், பேரிகார்டுகள் என சாலை முழுவதும் JCB இயந்திரம் மோதி சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், போதையில் நடந்த சம்பவமா? என சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சிறுவன் கண்மாய்க்கரை சாலையில் இரும்பு கடை  முன்பாக இரும்பு பொருட்களை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது JCB யை விட்டு மோதியதில் வாகனம் சிறிது தூரம் தூக்கிசெல்லப்பட்டது. அப்போது அங்கிருந்த இரும்பு கடை முன்பு கட்டிலில் உறங்கி கொண்டிருந்த காவலாளி ராமர் மீது சரக்கு வாகனம் கவிழ்ந்த நிலையில் அவர் நூலிலையில் உயிர்ப்பினார். 

Night
Day