10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு அரசு மாநில பாடத் திட்டத்தில் பயிலும் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 22 ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும், பொதுத்தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வு நடைபெறும் எனவும் அடுத்த வருடம் மே மாதம் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 11ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும், பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அடுத்த வருடம் மே மாதம் 19ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் அடுத்த வருடம் மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது, 

Night
Day