தமிழகம்
ரயில்வே ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணை
ரயில்வே ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணைகடலூர் ரயில் நிலைய மேலாளர் அசோக்குமார?...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 கடைகள் எரிந்து சேதமாகின. காகுப்பத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் நேமூரில் மளிகை கடை மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடையிலுள்ள பிரிட்ஜின் பின்புறத்தில் இருந்து திடீரென புகை வந்து தீப்பற்றியுள்ளது. இந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து விக்கிரவாண்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர். இதில் மூன்று கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணைகடலூர் ரயில் நிலைய மேலாளர் அசோக்குமார?...
ரயில்வே ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணைகடலூர் ரயில் நிலைய மேலாளர் அசோக்குமார?...