எழுத்தின் அளவு: அ+ அ- அ
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12வது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் விளம்பர திமுக அரசின் அலட்சிய போக்கை கண்டித்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம் செய்வோம், என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விளம்பர திமுக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் விளம்பர திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள திரையரங்கில் இருந்து ஆர்.ஆர்.ஸ்டேடியம் வரை ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, விளம்பர திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியப்படி பதாகைகள் ஏந்தியவாறு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, பகுதி நேர மாற்றத்திறனாளி ஆசிரியர் ஒருவர் சாலையில் படுத்து உருண்டு, கண்ணீரோடு கோரிக்கை வைத்தது சக ஆசிரியர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. விளம்பர திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றாமல் தங்களை ஏமாற்றி வருவதாக பகுதி நேர ஆசிரியர்கள் வேதனையை தெரிவித்தார். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பகுதி நேர ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.