விருதுநகரில் போதை இளைஞர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கஞ்சா போதையில் அராஜகத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

சேத்தூர் ஐந்து கடை பஜார் பகுதியில் கடந்த தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த சிறுவர்களை கஞ்சா போதை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த புகாரின் பேரில், இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சிறையிலிருந்து மறுநாள் வெளியே வந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள சமுத்திரம், சூர்யா உள்ளிட்ட 5 பேரின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களை தாக்கி வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் தண்ணீர் டேங்க்கை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Night
Day