புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 27ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27 ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மோன்தா' (Montha)  என்ற பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் 27-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day