சென்னை அசோக் நகரில் மரத்தின் மீது கண்டெய்னர் வேன் மோதி விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அசோக் நகரில் மரத்தின் மீது கண்டெய்னர் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

அசோக் நகர் 12வது அவென்யூ வழியாக கண்டெய்னர் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கண்டெய்னர் வேன் ராட்சத மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தில் சிக்கிய கண்டெய்னர் வேனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் கண்டெய்னர் வேனை இயக்கி வந்தது தெரியவந்தது.

Night
Day