ஆந்திர பேருந்து விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு பிரதமர் மோடி வருத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இந்த கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தமது எண்ணங்கள் இணைந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Night
Day