வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம், பனகல் மாளிகை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் அடிக்கடி நடக்கும் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், புதிய மேம்பால பணி துவங்க உள்ளதால் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது. இதற்கு பதிலாக சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

Night
Day