தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இயல்பை விட 3முதல் 5 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 முதல் 42 செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது. மேலும் இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 3538 செல்சியஸ் இருக்கக்கூடும் என்றும் 26 முதல் 28 தேதி வரை தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...