வயநாடு நிலச்சரிவு - உதவிகரம் நீட்டிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவுக்கு நடிகர்கள் கார்த்தி, சூர்யா, மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தனர். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 290 ற்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் மாயமானவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் பிரனாயி விஜயன் முதல் மந்திரி பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்யுமாறு பொது மக்களிடம் கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிதியுதவியாக அளித்த நிலையில் நடிகர் கார்த்தி, சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.

varient
Night
Day