வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்கும் - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பொதுமக்கள் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தலையடுத்து வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், லட்சக்கணக்கான மக்களின் ஒருமித்த வேண்டுகோளுக்கு இணங்க வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில்  கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் கோவில்பட்டி பொதுமக்கள் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day