புரட்சித்தாய் சின்னம்மா தலைமையேற்க வேண்டும் - கழக தொண்டர்கள் வேண்டுகோள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் லட்சியக் கனவான அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்‍க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், புரட்சித்தாய் சின்னம்மா, அஇஅதிமுகவுக்‍கு தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்தும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கழகத் தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அஇஅதிமுக பிளவுபட்டுள்ளதால், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்வியிலிருந்து காப்பாற்றவும், கழகத்தை சிறப்பாக வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றனர்.

 அந்தவகையில் சின்னம்மாவின் லட்சியக்‍ கனவான புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்‍க வேண்டும் என வலியுறுத்தி, கழகத் தொண்டர்கள் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். புரட்சித்தாய் சின்னம்மா அஇஅதிமுகவுக்‍கு தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வழிநடத்த வேண்டும் என தொண்டர்கள் சுவரொட்டிகள் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். சிவகங்கை பேருந்து நிலையம் எதிரிலும், அரண்மனை வாசல் நீதிமன்றம் அருகிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பத்தூர் சாலை, மதுரை முத்து தேசிய நெடுஞ்சாலை,  மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை, மதகுபட்டி, திருப்பத்தூர், காரைக்குடி, பூவந்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புரட்சித்தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டி கழகத் தொண்டர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் காண்போரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. 

Night
Day