SIR குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சருக்கு பயந்தே 41 கட்சிகள் பங்கேற்றன - தமிழிசை சௌந்தரராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சருக்கு பயந்து தான் 41 கட்சிகளும் பங்கேற்றதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள தனியார் அரங்கில் தமிழிசை சௌந்தரராஜன் எழுதிய "The Story Of SIR" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, SIR மூலம் வாக்குரிமை பறிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார். SIR மூலம் இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட போகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Night
Day