தமிழகம்
ரிப்பன் மாளிகை அருகில் டெண்ட் அடித்து போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர். வந்தவாசி பழைய பேருந்து நிலையம், பஜார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் சாலை ஓரத்தில் கடைகள் போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிச்சல் அதிகரித்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் கடை வியாபாரிகள் கடைகளை அகற்றாததால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...