மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் : புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

நம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை நீத்த, மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினத்தில் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்திடுவோம் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

இது குறித்து புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும் என்று புரட்சித்தாய் நினைவு கூர்ந்துள்ளார்.

அந்தத் தியாக வேள்வியில், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாணவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நம் புரட்சித்தலைவி அம்மா வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தி தியாகிகளின் பெருமைகளையும், நம் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்ப்பதாக சின்னம்மா தெரிவித்துள்ளார். 

நம் தமிழ் மொழிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றிடும் வகையில், நம் கழகத் தொண்டர்கள், குறிப்பாக மாணவச் செல்வங்கள் அனைவரும், தியாக செம்மல்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, தமிழ் மொழியின் சிறப்புகளை மென்மேலும் உயர்த்திட உறுதியேற்றிடுவோம் என்று புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day