தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
சென்னையில் ஆங்காங்கே மெட்ரோ பணிகள், குடிநீர் வாரிய பணிகள் நடைபெறும் நிலையில் வரவிருக்கும் பருவமழையை தாக்குபிடிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 7 மண்டலங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆங்காங்கே நடைபெறும் குடிநீர் மற்றும் மின்சார வாரிய பணிகளால் பல்வேறு பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இவற்றை விரைந்து முடித்து பருவமழையை எதிர்கொள்ளும் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...