டெல்லி கார் வெடிப்பு ; கொடூர பயங்கரவாத சம்பவம் - மத்திய அமைச்சரவை

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு "தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று மத்திய அமைச்சரவை கூறியதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்தது. அப்போது இந்த பயங்கரவாத சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டதற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த அமைச்சரவை, உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அஷ்வினி வைஷ்ணவ், டெல்லி குண்டுவெடிப்பு "தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று அமைச்சரவை கூறியதாக தெரிவித்தார். மேலும் இக்கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களது கூட்டாளிகளையும் நீதியின் முன் நிறுத்த மிக விரைவாக விசாரணை நடத்த  உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த "கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை" கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும்  பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை இல்லாத கொள்கைக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். 

Night
Day