14வது ஆண்டில் தந்தி தொலைக்காட்சி - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தந்தி தொலைக்காட்சி 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள பதிவில், தந்தி தொலைக்காட்சி 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். நடுநிலையான செய்திகள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சிறப்புடன் பணியாற்றி, ஊடகத்துறையில் தனது முத்திரையை பதித்து வரும்,  தந்தி தொலைக்காட்சி தொடர்ந்து சிறப்புடன் செயலாற்றிட எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். தந்தி தொலைக்காட்சி மென்மேலும் வளர்ச்சியடையவும், உயரிய நிலையை அடையவும் தங்கள் நிறுவனத்தினருக்கும், பணியாளர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார் 

Night
Day